ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி எம். பி. டி ரோட்டில் வசிப்பவர் பத்ராசலம் இவருடைய மகன் சீனு(எ) சீனிவாசன் -26 தற்போது திருமணமாகி எந்த வேலைக்கும் போவத இவர் இன்று உறவினர் வீட்டிற்கு இரங்கல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்

அப்போது மது போதையில் மாமண்டூர் ஜங்ஷன் பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் அந்த ஜங்ஷன் அருகே கருங்கலுடன் நின்றுகொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்

அப்போது அவளூர் காவல் துணை ஆய்வாளர் ஏழுமலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அந்த இளைஞரை கூப்பிட்டு அறிவுரை கூறி அனுப்பினார் 

ஆனால் அந்த இளைஞர் போலீசார் சொல்வதை சிறிது கூட கேட்காமல் இளைஞருக்கு போதை தலை உச்சிக்கு ஏரி ‌மறுபடியும் அந்த இடத்தில் தீவிர ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்

இதுதொடர்பாக அவளூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் போதையில் ‌ ரகளையில் ஈடுபட்டு வந்த சீனு என்கிற சீனிவாசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது போலீசார் விசாரணையில் ‌ அந்த இளைஞர் மீது ஏற்கனவே கொலை முயற்சி அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால் அவரை சிறையில் அடைத்தனர்