- நாட்டு மக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் 100 கோடி தடுப்பூசி சாதனை சாத்தியமானது
- சிறப்பான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி திட்டம் 100 கோடி மைல்கல்லை எட்டியுள்ளது
- மிகப்பெரிய சாதனை படைத்து நாம் புதிய சரித்திரம் படைத்துள்ளோம்
- புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த பரிசு
- கடுமையான சோதனைகளுக்கிடையே இது இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பாக மாற்றப்பட்டது
- உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது
- தடுப்பூசி செலுத்துவதில் விஐபி கலாசாரம் கடைப்பிடிக்கப்படவில்லை
- இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருட்களுக்குநாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
- பண்டிகைக் காலங்களில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது; மாஸ்க் போடுவதை தொடர வேண்டும்
- போரின்போது கவசங்களை தொடர்ந்து அணிவது போல கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர வேண்டும்
- விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்புவது எப்படி பயனளிக்கும் என்ற கேள் எழுப்பப்பட்டது; அந்த முயற்சிகள் எல்லாம் மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை அளித்துள்ளது