இந்நிலையில், வருகிற 1ம் தேதியிலிருந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வெளிதாங்கிபுரம் நடுநிலைப்பள்ளி, ரங்காபுரம் தொடக்கப்பள்ளியில் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் புதர் மண்டிக்கிடந்தது.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செல்வம், பாஸ்கர் கோரிக்கையை ஏற்று பாணாவரம். வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அர்ஜூனன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின்பேரில் 200க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை தொழிலாளர்கள் முட்புதர்களை அகற்றினர். அப்போது, ஊராட்சி மன்ற உறுப்பினர் முனிசாமி, ஊராட்சி செயலர்கள் பிச்சாண்டி, ரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.