நெமிலி அடுத்த சிறுணமல்லி ஏரிக்கரை பகுதியில் முப்படை முன்னாள் படைவீரர்கள் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சியில், ஆர்டிஓ சிவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
நெமிலி அடுத்த சிறுணமல்லி ஏரிக்கரை பகுதியில் முப்படை முன்னாள் படைவீரர்கள் சார்பில் 20 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் முப்படை முன்னாள் படைவீரர்களான தன்ராஜ், சரவணன், ராம மூர்த்தி, பெருமாள் ஆகியோர் தலைமையில் பனை விதை நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அரக்கோணம் ஆர்டிஓ சிவதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நெமிலி அடுத்த சிறுணமல்லி ஏரிக்கரை பகுதியில் நேற்று மகாத்மா தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் பணியாற்றக்கூடிய 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 20 ஆயிரம் பனை விதைகள் ஏரிக்கரை பகுதியில் நட்டனர். 

உடன் விஏஓ சரவணன் அகவலம் முன்னாள் படை கோவிந்தராஜ் உட்பட பலர் உடனிருந்தனர் .