வேலூர் ஓட்டேரியில் முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையானது தற்போது நடந்து வருகிறது. இதில் சதவிகித வன்னியர் இட ஒதுக்கீட்டில் சேர அடுக்கம்பாறை , பாகாயம், ஆற்காடு, கலவை, திமிரி, கணியம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற ஏழை மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி ஆர்வமுடன் வந்திருந்தனர்.

ஆனால் கல்லூரி நிர்வாகமும் முதல்வரும் அவர்களுக்கான 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு முடிந்துவிட்டதாக கூறி அவர்கள் கல்லூரியினுள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, , மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக கல்வி சேர்க்கை முடிந்தது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் கலைந்து செல்லாததால் கல்லூரி கல்வி இணை இயக்குநர் காவேரி சம்பவ இடத்திற்கு வந்து முத்துரங்கம் அரசு கல்லூரியில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு முடிந்துவிட்டதாகவும், மாதனூர் எம். ஜி. , ஆர் அரசு கலைக்கல்லூரியில் அதிக இடங்கள் காலியாக இருப்பதாகவும் அங்கு மாணவர்களை சேர்க்கலாம் என உறுதியளித்த பின்னர் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.