அருணகிரிநாதரின் பாடல் (திருப்புகழ்) பெற்ற தலம் மயிலம். இது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது

மயிலம் என்பது மயில் என்னும் பறவையின் காரணமாகத் தோன்றியது. முருகனிடம் தோற்ற சூரபத்மன் முருகனின் வாஹனமான மயிலாகத் தன்னை ஏற்றுக்கொள்ள தவம் செய்த இடம் என்பது ஒரு வரலாறு.

மயில் வடிவத்தில் தோன்றும் மலை என்பதால் மயிலம் என்று பெயர் பெற்றது என்பது மற்றொரு வரலாறு.

மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது திருமயிலம் திருத்தலம். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகில், கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில்.