பாணாவரம் அடுத்த பிள்ளையார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்துரை சாமி(48). சோளிங்கரில் உள்ள தனியார் கம்பெ னியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் துரைசாமி புதிதாக கட்டியுள்ள தனது வீட்டில் மின்விளக்கை எரிய வைக்க, ஸ்விட்ச் பாக்ஸில் இருந்து மின் வயர் மூலம் இணைப்பு கொடுத்துள்ளார்.

அப்போது, எதிர் பாராதவிதமாக மின் சாரம் தாக்கியதில் துரை சாமி மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி நேற்று இறந்தார்.

இதுகுறித்து, சாந்தி பாணாவரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.