அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில்,
"ராணிப்பேட்டை மாவட்டம் கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தினாலும், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த
T. பாபு, (நெமிலி கிழக்கு ஒன்றிய புரட்சித் தலைவி பேரவை துணைத் தலைவர்) S. பாஸ்கரன், (சோளிங்கர் கிழக்கு ஒன்றிய புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்) P. சையத்கான், (ஆற்காடு மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்) K. வெங்கடேசன், ( ஆற்காடு மேற்கு ஒன்றிய இலக்கிய அணி இணைச் செயலாளர்) C. பாண்டியன், (அனந்தாபுரம் காலனி கிளைக் கழகச் செயலாளர், அரக்கோணம் கிழக்கு ஒன்றியம்) C. கஜேந்திரன், (பெருமூச்சி காலனி கிளைக் கழகச் செயலாளர், அரக்கோணம் மேற்கு ஒன்றியம்) L. வெங்கடேசன், (தணிகைபோளூர் கிளைக் கழகச் செயலாளர், அரக்கோணம் கிழக்கு ஒன்றியம்) S. அசோக்குமார், (கடம்பநல்லூர் கிராமம் நெமிலி கிழக்கு ஒன்றியம்) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்." என்று அந்த அறிவிப்பில் ஓபிஎஸ். இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.