ராணிப்பேட்டை மாவட்டம். ஆற்காடு அடுத்த ‌ரத்தினகிரி, நந்தியாலம் குறிஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கல்குவாரி குட்டை உள்ளது இதில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்ற பெண் துணி துவைப்பதற்காக சென்றுள்ளார் இரவு ஆகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் அவரது உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் தேடியும் கிடைக்காத காரணத்தினால் ரத்தனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் இதன் அடிப்படையில் இன்று காலை தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய இந்திராவின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்திரா குட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் இந்திராவிற்கு அடிக்கடி வலிப்பு வருவதாக கூறப்படுகிறது, இதன் காரணமாக இந்த வலிப்பு ஏற்பட்டு குளத்தில் விழுந்தாரா அல்லது கால் தவறி குளத்தில் விழுந்தரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.