ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக பொன்விழாவையொட்டி எம்எல்ஏ சு. ரவி அதிமுக கொடி ஏற்றி எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில், ராணிப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் அதிமுக கொடி ஏற்றி எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுகச் செயலாளரும் சட்டப்பேரவை துணைக் கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ, அதிமுக கொடி ஏற்றி வைத்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.