வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த திருப்பகொட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் மது குடித்துவிட்டு டம்ளரில் சிறிதளவு மதுவை வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த அவரது ஐந்து வயது பேரன் பேத்தி குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்துள்ளான். அப்போது அவனுக்கு புரையேறி இரும்பியுள்ளான். சிறுவனின் பெற்றோர் சின்னசாமியை கண்டித்த போது அதிர்ச்சியில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து சிறுவன் மற்றும் சின்னசாமியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து திருவலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.