ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெரிய அசேன்புரா பகுதியில் வசிக்கும் சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு. ஆற்காடு அரசு மருத்துவம்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுமி வசிக்கும் பகுதியில், நகராட்சி சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் நேற்று நடந்தது. இதில், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் தூய்மைப்பணியாளர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக் களை கண்டறிந்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வீடுகளின் அருகே தேங்கியுள்ள தண்ணீர், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். மேலும், வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளித்தனர். கிருமி நாசினி மற்றும் புகை மருந்து அடித்தனர். மேலும், குடிநீரை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.