ஆற்காடு அடுத்த வேப்பூர் வசிஸ் டேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள பாலாற்று தண்ணீரில் வாலிபர் ஒருவர் சிக்கி தவிப்பதை நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் . 

இதுகுறித்து ஆற்காடு டவுன் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர் . அதன் பேரில் நிலைய அலுவலர் ஜெகநாதன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீரில் தத்தளித்த வாலிபரை உயிருடன் மீட்டனர் . 

அவரிடம் நடத்திய விசாரணையில் , வாலாஜா இந்திரா நகரைச் சேர்ந்த சீனிவாசன் ( 25 ) என்பதும் , நண்பர்களுடன் வந்து குளிப்பதற்காக ஆற்றின் நடுவில் சென்று சிக்கியதும் தெரியவந்தது .