உடல் நலம் பாதிப்பு 

ஆற்காடு அடுத்த ஆனைமல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி மங்கலட்சுமி(50), இவர்களுக்கு 2 மகள்கள். மங்கலட்சுமி கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். 

தீக்குளித்து தற்கொலை

இதனால் மன வேதனையடைந்த அவர் கடந்த 16ம் தேதி அதிகாலை தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடல் முழுவதும் பரவிய தீயால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிகிச்சை பலனின்றி இறந்தார்

பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மங்கலட்சுமி இறந்தார்.