அரக்கோணம் அடுத்த மங்கமாபேட்டை பல்லத் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பாலாஜி(எ) 1 காமேஷ்(25). கூலி தொழிலாளி. 

குடிபழக்கம் உடையவர். திருமணமாகாதவர். இவரது தந்தை, தாய், அண்ணன் ஆகிய 3 பேரும் பல நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பாலாஜி மனஉளைச்சலில் இருந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூலி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர். நீண்ட நேரமாகியும், வீடு திரும்பவில்லை. இந் நிலையில் அவரது பெற்றோர் பாலாஜியை தேடிவந்தனர். நேற்று அவரது வீட்டின் அருகில் உள்ள ஈச்சமரத்தில் கயிற்றில் துாக்கு மாட்டியது போல் இறந்து கிடந்தார். அவ்ரது உடல் தரையில் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பாலாஜி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.