ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த ரங்காபுரம் பஸ் ஸ்டாண்ட் நிழற்குடையில் படுத்து துாங்கி கொண்டி ருந்த 65 வயது மதிக்கத் தக்க முதியவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லாரி மோதியதில் சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் பாணாவரம் போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்து வமனைக்கு பிரேத பரி சோதனை செய்ய அனுப்பிவைத்தனர். கடந்த ஒருவாரமாக முதியவர் குறித்து பல்வேறு வகைகளில் தகவல் கொடுத்தனர். ஆனால் இதுவரை உறவினர்கள் யாரும் வராததால் பாணாவரம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வரும் வேலுாரை சேர்ந்த போலீஸ்காரர் வெங்கடேசன் நேற்று சோளிங்கர் அரசு மருத்துவமனையில் இருந்து உடலை வாங்கி இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார். இதனை பார்த்த பொதுமக்களும்,சக போலீசாரும் அவரின் மனித நேயத்தை பாராட்டினர்.