ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை காந்தி பார்க் பின்புறம் உள்ள திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் இளையமகன் குப்புசாமி-42 இவர் வேலுரில் உள்ள துணிக்கடைத் வேலை செய்து வருகிறார் 

இவருக்கு திருமணாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் தாய் மற்றும் சகோதரிகளோடு வசித்து வருகிறார் இந்நிலையில் குப்புசாமி தினந்தோறும் வேலூரில் உள்ள துணிக்கடைக்கு பைக்கில் வேலைக்கு சென்று வந்துள்ளார் 

மேலும் வழக்கம் போல துணிக்கடையில் வேலை முடித்துவிட்டு பைக்கில் வேலூரிலிருந்து புறப்பட்டுள்ளார் 

அப்போது வாலாஜா வீ. சி. மோட்டூர் ரவுண்டானா 
பைபாஸ் சிக்னல் சாலை அருகே சென்ற அரசு பேருந்தை அவரை முந்த சென்ற போது பஸ் அந்த பைக்கியின் மீது உரசியதால் 

இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த குப்புசாமி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து தகவலறிந்து வந்த வாலாஜா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்