ஆற்காடு பைபாஸ் சாலை பாலாறு பழைய பாலம் சந்திப்பு அருகே பைக்கில் வந்து மயக்கமடைந்த தொழி லாளியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்


ஆற்காடு டெல்லிகேட் பகுதியில் நேற்று நடந்த மினி மாரத்தான் துவக்க விழாவில் பங்கேற்ற கலெக்டர் பாஸ் கரபாண்டியன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆற்காடு அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பைக்கில் தனது மனைவியுடன் வந்தபோது, திடீரென நிலை தடுமாறினார். அங்கிருந்த பொதுமக்கள் ஓடிச் சென்று பைக்கை பிடித்து தொழிலாளி கீழே விழாமல் பாதுகாப்பாக இறக்கினர்.

இதைக்கண்ட கலெக்டர் காரிலிருந்து இறங்கி, தொழிலாளிக்கு தண்ணீர் கொடுத்தார். விசாரித்ததில், தொழிலாளிக்கு ஏற்கனவே விபத்து ஏற்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும், மருத்துவ பரிசோதனைக்காக ஆற்காடு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவ்வழியாக வந்த ஆட்டோவில் தொழிலாளியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

அவருக்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.