ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஆற்காடு-செய்யாறு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (வயது 37) என்பதும், மதுபாட்டில்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் கோவிந்தனை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.