வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவ சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தேசிய தலைவர் ராஜகோபால் குருஜி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தார்.
அதில் தனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து, தாக்குதலை நடத்துவதாகவும் கடந்த வியாழக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தனது கடைக்குள் நுழைந்து கடையை அடித்து நொறுக்கியதாகவும் தன்னையும் தாக்கியதாகவும் சிசிடிவி கேமரா ஆதாரங்களுடன் பாகாயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அங்குள்ள உதவி ஆய்வாளர் ஜெகதீஷ் என்பவர் வழக்கு மீது நடவடிக்கை எடுக்காமல் கட்டபஞ்சாயத்து பேசுவதும் புகார் அளித்த தன் மீது பி. சி. ஆர் பொய் வழக்கு போடுவேன் என்றும் நீ எஸ்பியிடம் சென்றாலும் விடமாட்டேன் எங்கு சென்றாலும் என்னிடம் தான் வரவேண்டுமென மிரட்டியதால் கடையை தாக்கி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்து மனு அளிக்க வந்தார்.

காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்கு வாதம் ஏற்பட்டு பரபரப்பு காணப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தார்