திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் ராணிபேட்டை மாவட்டம் நெமிலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று இரவு அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகஷேந்தி கணேஷிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் புன்னை மூலபட்டு பகுதியை சார்ந்த வாலிபர் ஒருவர் எங்களுக்கு பத்திரிகை துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவ்வப்போது பணம் பெற்றுக் கொண்டார். மேலும், எங்களுடைய லேப்டாபில் பத்திரிகை துறை சம்பந்தமான தரவுகளை பதிவேற்றம் செய்து தருவதாக கூறி லேப்டாப்களையும் பெற்று சென்றுவிட்டார். நீண்ட நாட்களாகியும் லேப்டாபை திரும்ப தரவில்லை. இதனால் பணத்தை திரும்ப கேட்டபோது பணம் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்துபணம், லேப்டாப்பை பெற்றுத்தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதுசம்பந்தமாக அந்தவாலிபரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.