தமிழகம் முழுவதும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1,000 உதவித்தொகை பெறும் நபர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் விஏஓ அலுவலகங்களுக்கு வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் 57 வருவாய் கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர். விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகிய உதவித்தொகைகள் பெறும் நபர்கள் என மொத்தம் 19,774 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களில் இருந்து அனைத்து விஏஓ அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஏஓ மூலமாக இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த வேட்டி, சேலைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.