ராணிப்பேட்டை: அரக்கோணம், வாலாஜா அரசு இ-சேவை மையங் களில் புகைப்படத்துடன் கூடிய மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர்களுக்கு புகைப்படத்து டன் கூடிய மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நெமிலி மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் அடையாள அட்டைகள் அச்சிடும் இயந் திரங்கள் பழுதடைந்துள்ளன. அவை சரி செய்யப்பட்ட பிறகே மாற்று புகைப் பட அடையாள அட்டைகள் வழங்கப்படும். தற்சமயம் அரக்கோணம் மற்றும் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் மட்டும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.