ராணிப்பேட்டை கங்காதரா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் லதா (52). இவர் வாலாஜா டோல்கேட்டில் இருந்து ஆட்டோவில் வாலாஜாவுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது மேம்பாலம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டு (இரும்பு தடுப்பு) மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக முதலில் வாலாஜா அரசு மருத்து வமனையிலும் பின் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாலா ஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரகின்றனர்.