ராணிப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் 3 சவரன் நகைகள், 17,500/-திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அடுத்த சத்திரம்புதூர் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேட்டு(27), விவசாயி. இவர் கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேர்க்கடலை அறுவடை செய்வதற்காக, தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். வேலை முடிந்து மாலையில் இருவரும் வீடு திரும்பினர்.

அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப் பட்டு, திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும், அதிலிருந்த 3 சவரன் நகைகள் 17,500 ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென் றது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சேட்டு சிப்காட் போலீ சில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சேவியர் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.