தங்கத்தின் விலையானது கடந்த வார இறுதியில் பலத்த ஏற்றத்தினை கண்டாலும், கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மொத்தமாக பார்க்கும் போது, தங்கம் விலையானது சரிவில் தான் காணப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை பலத்த சரிவினைக் கண்ட நிலையில், சற்றே அதிலிந்து நான்கு சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது எனலாம். இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 2.1% கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தங்கம் விலையானது 1750 டாலர்கள் என்ற நிலையிலேயே தடுமாறி வந்த நிலையில், கடந்த வாரத்தில் 1750 டாலர்களை உடைத்துக் காட்டியிருந்தாலும், மாத இறுதியில் மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

நிபுணர்களின் கணிப்பு

கடந்த வார இறுதியில் சற்று ஏற்றத்தை கண்டே முடிந்திருந்தாலும், மீண்டும் வரும் வாரத்தில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அழுத்தத்திலேயே காணப்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையானது சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பணவீக்கம் பற்றிய அச்சம்

சர்வதேச அளவில் அளவில் கச்சா எண்ணெயின் விலை அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கமும் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இது சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. நவம்பர் மாதம் முதற்கொண்டு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி எனது பத்திரமாக வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், பணவீக்கம் அதிகரித்தால் இவை பற்றி மீண்டும் அமெரிக்கா யோசிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

சிறந்த ஹெட்ஜிங் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலை, மேலும் அதிகரிக்க இது வழிவகுக்கும் என்ற நிலையில் இருந்து வருகிறது. இதனால் அக்டோபர் மாதத்தின் பிற்பாதியில், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் நிலையில், இது தங்கம் விலையை நீண்டகால நோக்கில் ஊக்குவிக்க வழிவகுக்கலாம். மேலும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்ததாகவும் இருக்கும் நிலையில், இது முதலீட்டு ரீதியாகவும் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. ஆக இதுவும் தங்க விலை அதிகரிக்க சாதகமான காரணியாக பார்க்கப்படுகிறது.

தலைதூக்கும் சீன பிரச்சனை

சர்வதேச அளவில் இரண்டாவது பொருளாதாரமாக இருக்கும் சீனாவில், தற்போது கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் மீண்டும் உற்பத்தி பாதிக்க தொடங்கியுள்ளது. மேலும் சர்வதேச அளவிலான விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், இதன் மூலம் மூலதன பொருட்களுக்கான பற்றாக்குறையை ஏற்படுலாம் என்ற நிலையும் நிலவி வருகிறது. இது பொருளாதாரம் மீண்டும் சரிய காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் அதிகரிக்கலாம்

ஆக இது சந்தையில் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்க்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை, தங்கத்தின் பக்கம் முதலீடு செய்ய ஈர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்தாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்திலும் தங்கத்தின் முக்கிய லெவலான 1750 டாலர்களை உடைத்தால் மேற்கொண்டு அழுத்தத்தினை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது வரும் வாரத்தில் நாளை தொடக்கத்தினை பொறுத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் சரியான இடம்

இந்திய சந்தையில் தங்கம் விலையானது வரும் வாரத்தில், 45,500 ரூபாயில் இருந்து, 45,000 ரூபாய் வரையில் சரியலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். டாலரின் மதிப்பு மீண்டும் வலுவடைந்து வரும் நிலையில், இது மேலும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1750 - 1760 டாலர்களை உடைத்து மேலாக சென்றால், 1800 - 1850 டாலர்கள் வரையில் செல்லலாம். இதே இந்திய சந்தையில் 48,000 ரூபாய் முதல் 48,500 ரூபாய் வரையில் செல்லமால் என்று கணித்துள்ளனர். மேலும் 45,000 - 46000 ரூபாய் என்ற லெவலானது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

எவ்வளவு அதிகரிக்கலாம்


அடுத்த மூன்று மாதங்களில் தங்கம் விலை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று கூறி வருகின்றனர். . அதே போல வெள்ளியின் விலையும் அடுத்த மூன்று மாதங்களில் 10,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடம் என்று சொல்லலாம். இதை மற்றொரு நிபுணர்கள் உறுப்பினர்கள் வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலையானது 10 கிராமுக்கு 49,000 ரூபாய் வரை செல்லலாம் என கணித்துள்ளனர்.