கலவை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர் . 

அப்போது கலவை பள்ளத்தெரு பகுதி ஒத்தவாடைதெருவில் டாஸ்மாக் மதுவிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர் .

சோதனையில் விஸ்வநாதன் மனைவி ரேகா ( 42 ) என்பவர் தனது வீட்டின் பின்புறம் அரசு மதுவை பதுக்கி அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது .

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேகாவை கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .