ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டையில் நடந்தது.
அவைத்தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சருமான காந்தி முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்துக்கு வருவது குறித்து பேசினார்.

கூட்டத்தில், வேலூரில் வரும் நவம்பர் 2ம் தேதி அரசு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் 1ம் தேதியே புறப்பட்டு வருகிறார். அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மாலை 5 மணி அளவில் பிரமாண்டமான வரவேற்பு அளிப்பது என, தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள்கலந்து கெண்டனர்.