ஆற்காடு அடுத்த தாஜ்புராவை சேர்ந்தவர் குமார் (49). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். 

இருப்பினும் குணமாகாததால் வேதனையில் இருந்தாராம். இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவு உடல்நலம் பாதிப்பால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத் தினர் குமாரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து ஆற்காடு போலீசில் அவரது மனைவிராணி நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.