இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவை வேகமாக வளர்ந்து மக்களின் வாழ்க்கை முறை எந்த அளவிற்கு எளிமையாகியுள்ளதோ, அதே அளவிற்குப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது. தற்போது ஆன்லைன் பண மோசடி அதிகமாகியுள்ளது, இதில் சிக்கி பலர் அதிகளவிலான பணத்தை இழந்து வருகின்றனர்.
ஆனால் தவறாக ஒரு வங்கி கணக்கிற்குப் பணத்தை அனுப்பிவிட்டால் அதை எப்படித் திரும்பப் பெறுவது எப்படி என்பதில் பலருக்கும் சந்தேகமும் குழப்பமும் இருக்கும்.

3 மாத உயர்வில் இருந்து சரிந்த தங்கம் விலை.. அடடே இது நல்ல சான்ஸ் ஆச்சே..!

டிஜிட்டல் வங்கி சேவை

இன்று இந்தியாவில் யூபிஐ, நெட் பேங்கிங், மொபைல் வேலெட் ஆகியவற்றின் மூலம் வங்கி பணப் பரிமாற்றத்தை மிகவும் எளிதான ஒன்றாக மாறியுள்ளது. வெறும் செல்போன் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்ப முடியும்.

தவறான கணக்கு

ஆனால் சில நேரத்தில் நம்முடைய பணம் தவறுதலாகத் தவறான கணக்கிற்குச் சென்றுவிடும், இது தவறான வங்கி கணக்கு எண் பதிவு செய்வதில் மூலம் ஏற்படும் பிரச்சனை. அப்படித் தவறான நபருக்கு அனுப்பிய பணத்தை நம்மால் திரும்பப் பெற முடியும். இதை எப்படிச் செய்வது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

வங்கியில் புகார்

தவறான கணக்கிற்குப் பணத்தை அனுப்பிய உடனேயே வங்கி வாடிக்கையாளர் சேவை அல்லது வங்கி கிளையில் புகார் அளிக்க வேண்டும். வங்கி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கையை எடுக்க ஈமெயில் முதல் பல தரவுகளைக் கேட்கும், அதனால் பணப் பரிமாற்றம் செய்த நேரம், வங்கி கணக்கு எண் ஆகியவை அனைத்தையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பணம் திரும் கிடைத்து விடும்

தற்போது பணப் பரிமாற்றத்திற்காக ஒரு வங்கி கணக்கைச் சேர்க்கும் போதே அனைத்து வங்கி கணக்கு எண், பெயர், IFSC குறியீடு ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால் மட்டும் ஒரு நபரை தனது வங்கி கணக்கில் சேர்க்க முடியும்.

நீண்ட காலம் தேவைப்படும்

ஒருவேளை நீங்கள் அனுப்பிய பணம் இத்தகைய தடைகளைத் தாண்டி பணம் தவறான கணக்கிற்குச் சென்றுவிட்டால் வங்கியில் புகார் அளிப்பதை விடவும் வேறு வழி இல்லை. மேலும் இந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் குறைந்தபட்சம் 2 மாதம் ஆகும்.

இல்லையெனில் நீங்கள் தவறான கணக்கு வைத்துள்ள வங்கி கிளையைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் இந்த வங்கி கணக்கில் புகார் அளிக்கும் பட்சத்தில் உரியை நபரிடம் வங்கி நிர்வாகம் பேசி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

நீதிமன்றம்

வங்கி நிர்வாகம் மூலம் பணத்தைத் திரும்பப் பெற முடியாத பட்சத்தில் நீதிமன்றம் தான் ஓரே வழி. தவறுதலாகப் பணத்தைப் பெற்ற நபர் திரும்ப அளிக்காத பட்சத்தில் அவர் மீது வழக்கு தொடுக்க முடியும்.

ரிசர்வ் வங்கி

இதேவேளையில் இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளிலும் பணத்தைத் தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தைத் திரும்பப்பெற்றுத் தருவது வங்கி நிர்வாகத்தின் பொறுப்பு. இதற்கான நடவடிக்கையை வங்கிகள் தான் எடுக்க வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் உஷார்

தவறான பணத்தைச் செலுத்திவிட்டால் திரும்பப் பெறுவதில் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் மக்கள் வங்கி கணக்கு மூலம் பணத்தைப் பரிமாற்றம் செய்யும் போது சரியான வங்கி கணக்கு எண், பெயர், IFSC குறியீடு ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துப் பணத்தை அனுப்புவது தான் சரி.