ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கிளாதாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவரது மனைவி கவிதா (32). இவர்களுக்கு திலிப் (14) மகனும், தர்ஷினி (12) மகளும் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான வெங்கடேசன் தொடர்ந்து மது குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் ஓடிச்சென்று குதித்துள்ளார். 

மனைவியை காப்பாற்ற கணவனும் கிணற்றில் குதித்துள்ளார். இருவரும் கிணற்றில் குதித்து கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கவிதாவை காப்பாற்றினர் நீண்ட நேரம் ஆகியும் வெங்கடேசனை கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக கலவை தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாதள கொலுசு மூலம் சிறிது நேரத்திலே வெங்கடேசனை மீட்டனர். 

அங்கு வந்திருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உடனடியாக அவரது உடலுக்கு முதல் எழுதிக் கொடுத்தார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அறிவித்தார். அங்கிருந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.