ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிவடைந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கடந்த 20ந்தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பதவி ஏற்று கொண்டனர்.


இந்நிலையில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான மறைமுகதேர்தல் நடைபெற்று வந்தன.

அதில்இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் தொடங்கியது
இந்த மறைமுக தேர்தலில் 9வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயந்திதிருமூர்த்தி போட்டியிட்டார்.

மேலும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஜெயந்தி அவர்கள் மாவட்ட ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி பெற்ற ஜெயந்தி திருமூர்த்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினை தெரிவித்தார்.

அப்போது மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு சால்வை அணிவித்து பொன்னாடை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.