ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, கதா் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மலா்தூவி மரியாதை செலுத்தி, தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கினாா். பின்னா், காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி பண்டிகையைப் முன்னிட்டு கதா் சிறப்பு விற்பனையை குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடக்கி வைத்துப் பேசினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், வட்டாட்சியா்கள் பாபு, விஜயகுமாா், கதா் வாரிய பணியாளா் பொது நலச்சங்க மாநிலத் தலைவா் நாகலிங்கம், உதவியாளா் நித்தியானந்தம், வாலாஜா பிரம்பு முடையோா் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க செயலாளா் ஜி. அன்பு, யோகேஸ்வரன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.