வாலாஜா அடுத்த கடப்பேரி கிராமத்தில் பயனாளிகளுக்கு பட்டாவை அமைச்சர் வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கடப்பேரி கிராமத்தில் பட்டா மாற்றம் செய்வதும் பட்டாக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சிறப்பு முகாம் நடைபெற்றது, இதில் மொத்தம் 297 பயனாளிகளிடம் பட்டா மாறுதல் மற்றும் திருத்தம் சம்பந்தமான மனுக்கள் ஆகியவை வருவாய்த்துறை மூலம் வழங்கப்படடது

இந்த முகாமில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி முகாமில் கலந்து கொண்டு சுமார் 15 பயனாளிகளுக்கு பட்டா சான்றிதழை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, ஆற்காடு
சட்டமன்ற உறுப்பினர் ஜெ. எல். ஈஸ்வரப்பன், வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பாலாஜி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயந்திதிருமூர்த்தி, வாலாஜாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் சேஷாவெங்கட், மாவட்டதுணை செயலாளர் ஏ. கே. சுந்தரமூர்த்திஜ, தலைமைசெயற்குழு உறுப்பினர் க. சுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ஜெயந்திதிருமூர்த்தி, வாலாஜாஒன்றிய குழுதலைவர் சேஷாவெங்கட், துணைத்தலைவர்
ராதாகிருஷ்ணன், கடப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் மாணவரணி மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.