அரக்கோணம் ஒன்றியத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டி யிடும் மாவட்ட , ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் . 
அப்போது அவர் பேசியதாவது : 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தார் . தற்போது ஆட்சிக்கு வந்த நான்கு மாதம் ஆன நிலையில் , 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார் . 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் . மேலும் , அரசு பஸ்சில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதால் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவிலான ( பணம் ) தொகை பெண்களுக்கு மிச்சமாகிறது . இதன் மூலம் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியும் .

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு , வீடு தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது . தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது . இன்னும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு ஏராளமாக செய்யப்பட உள்ளது என்றார் .