ஆத்மநிர்பார் பாரத் சுவயம்பூர்ணா கோவா திட்டப்பயனாளிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான் பரன்சிங் மூலம் நேற்று கலந்துரையாடினார். மாற்று திறனாளி ஒருவருடன் கலந்துரையாடிய போது தனது கடந்த காலத்தை 'சாய்வாலா' அல்லது தேநீர் விற்பனையாளராக மோடி நினைவு கூர்ந்தார்.

நீங்களும் என்னைப் போல சாய்வாலா என்று வாஸ்கோ நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியும், சிறு குறு தொழிலதிபரும், பாரா டேபிள் டென்னிஸ் வீர ருமான ருர்கி அகமது ராஜசாகேபிடம் மோடி கூறினார். ராஜாசாகேப் கடம்பா போக்குவரத்து கழக பஸ் நிலையத்துக்கு வெளியே டீக்கடை நடத்தி வருகிறார்.

மத்திய அரசின் ‘ஆத்மநிர்பார் பாரத்' முன்முயற்சியின் விரிவாக்கமான 'சுவயம்பூர்ணா கோவா' திட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் உள்ள பயனாளிக ளில் ராஜசாகேப் ஒருவர்.

2020 டிசம்பரில் சுவயம்பூர்ணா கோவா திட்டத் திற்கான முகாமில் தான் பங்கேற்று அதன் பயனாளி ஆனதைப் பற்றி பிரதமரிடம் ராஜாசாகேப் கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதையான வாழ்க்கையை வழங்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று மோடி கூறினார்.

'அரசு உங்களுடன் உள்ளது. நீங்கள் முன்னேறி னால் நாடு முன்னேறும்' என்றும் பிரதமர் கூறினார்.