ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆற்காடு டவுன் போலீசார் மேல்விஷாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு லாரியில் இருந்து மூட்டைகளை எடுத்துச் சென்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த சலீம் பாஷா (வயது 40) என்பதும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள குட்கா எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து குட்காவை பறிமுதல் செய்து, சலீம் பாஷாவை போலீசார் கைது செய்தனர்.