கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சாவுடன் கைது
இவரை தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் கடந்த மாதம் ஆற்காட்டில் கஞ்சாவுடன் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
எஸ்பி தீபா சத்தியன் பரிந்துரை
இந்நிலையில் , பகுடு பாஸ்கரை குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து பகுடு பாஸ்கரை ஓராண்டு குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அதற்குண்டான நகல் சேலம் சிறையில் இருக்கும் பகுடுபாஸ்கரிடம் நேரில் வழங்கப்பட்டது.