இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்து மக்கள் தலையில் பெரும் சுமை வைக்கப்பட்டு உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து விளைபொருட்களுமே விலை உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் காய்கறி மற்றும் பழங்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாகத் தக்காளி விலை பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பெட்ரோல் டீசல் விலை
இந்தியாவின் முன்னணி 3 பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் தேவைக்காகக் கச்சா எண்ணெய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் காரணத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் இதன் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வு
இன்று ராணிப்பேட்டையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 பைசா உயர்ந்துள்ளது, இதேபோல் டீசல் விலை 34 பைசா உயர்ந்துள்ளது.
இன்றைய பெட்ரோல் விலை (Oct 20)
ராணிப்பேட்டையில் - 104.65, சென்னை - 101.79 ரூபாய், டெல்லி - 104.44 ரூபாய், கொல்கத்தா - 105.09 ரூபாய், மும்பை - 110.41 ரூபாய், பெங்களூர் - 108.08 ரூபாய், ஹைதராபாத் - 108.64 ரூபாய், கோழிக்கோடு - 104.91 ரூபாய், போபால் - 113.00 ரூபாய், இந்தூர்- 113.04 ரூபாய்.
இன்றைய டீசல் விலை (Oct 20)
ராணிப்பேட்டையில் - 100.57, சென்னை - 97.59 ரூபாய், டெல்லி - 93.17 ரூபாய், கொல்கத்தா - 96.28 ரூபாய், மும்பை - 101.03 ரூபாய், பெங்களூர் - 98.89 ரூபாய், ஹைதராபாத் - 101.66 ரூபாய், கோழிக்கோடு - 98.56 ரூபாய்.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலர் மதிப்பு குறைந்தால் மட்டுமே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும், இல்லையெனில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தால் இதன் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளது.