ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராக அங்குலட்சுமி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார். 

அதன்படி,ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி மாவட்ட கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.அதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராக பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.