ராணிப்பேட்டை, தீபாவளி முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் பண்டிகைக்கு முன்னதாகவே கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் அனைவரும் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக எதிர்வரும் நவம்பர் 1,2,3 ஆகிய மூன்று நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை அதாவது 11 மணி நேரம் திறந்திருக்கும்.

அனைவரும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும். என்று ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண் கேட்டுக் கொண்டுள்ளார்.