காவேரிப்பாக்கம் உப்பு மேட்டு தெருவில் தீயால் சேதமடைந்த கூரை வீட்டு உரிமையாளருக்கு காவே ரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சுபலபிரியா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேவி ஆகியோர் தீயினால் சேதம் அடைந்துள்ள வீட்டை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு கூரை வீட்டில் திடீர் தீயால் முழுவதும் கருகி சாம்பலானது.

காவேரிப்பாக்கம் உப்புமேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன்(30), லாரி டிரைவர். இவரது மனைவி கிரி(27). இவர் களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவர்கள் தமக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரேவதி நேற்று மாலை டீ குடிப்பதற்காக காஸ் அடுப்பை பற்றவைத்து விட்டு வீட்டுவேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தீகசிவு ஏற் பட்டுள்ளது. இதனால் தீ கூரை வீட்டின் மேல் பகுதியில் பற்ற தொடங்கி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் வீடு முழுவதும் மளமளவென தீ பற்ற தொடங்கி உள்ளது. இதை பார்த்த அப்பகுதி பொது மக்கள், ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர்.

இதில் வீட்டின் மேற் கூரை முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் வீட்டில் இருந்ததுணிகள்,பாத்திரங்கள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் தீயை முழுவதும் அழித்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சமயத்தில் குழந்தைகள் வெளியே விளையாட சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் சுபல பிரியா, காவேரிப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டு அரிசி, பருப்பு, எண்ணெய், வேட்டி, சேலை உள்ளிட்டவைகளை வழங்கினர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் மாரி, சமூக ஆர்வலர் சரவணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.