ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சென்னை இருந்து பெங்களூர் செல்லும் சாலையில் உள்ள தாபா ஓட்டலில் கத்தி காட்டி கொலை மிரட்டல் செயலில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் வயது 42 இவர் டிரைவர் வேலையை செய்கிறார். இவரது நண்பன் ரஷீத் அகமது வயது 24 மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த இவர் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 

இவர்கள் இருவரும் (30. 09. 2021) இரவு 11. 45 மணி அளவில் ஓட்டலில் சாப்பிடுவதற்காக சென்ற இவர்கள் சாப்பிட்டுவிட்டு முடித்தபிறகு ஓட்டலில் பணம் கேட்டதால் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததால் உடனடியாக ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ஆய்வாளர் விநாயகமூர்த்தி உதவி ஆய்வாளர் மகாராஜன் இவர்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று கொலை மிரட்டல் செயலில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.