காவேரிப்பாக்கம் அருகே சமையல் செய்து கொண்டிருந்தபோது எரிவாயு கசிவு உடனடியாக சரி செய்தனர் தீயணைப்பு வீரர்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ராமாபுரம் கிராமம் திருவள்ளுவர் தெருவில் வசிப்பவர் ஜெயபிரகாஷ் இவர் தறி நெய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு சென்ற அவர் வீட்டில் அவரது அம்மா சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

பதற்றம் அடைந்த அவரது அம்மா எரிவாயு கசிவை சரி செய்ய அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்காக அழைத்துள்ளனர், 
ஆனால் அந்த கசிவை அவர்களால் யாராலும் சரி செய்ய முடியாத நிலையில் ராணிப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிவாயு கசிவை உடனடியாக சரிம செய்தனர்

சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டதின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.