வேலுார் பாகாயம் ஓட்டேரியில், முத்துரங்கம் அரசு கலைக்கல்லுாரி இயங்கி வருகிறது.
இங்கு, பிபிஏ வகுப்புகள் எடுக்கும் பேராசிரியர்களின் அறையில் நேற்று காலை 8.30 மணிக்கு திடீ ரென புகை வந்துள்ளது. இதைப்பார்த்த மாணவர்கள் உடனடியாக வேலுார் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வாளிகளில் தண்ணீரை நிரப்பிவந்து ஊற்றி, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வேலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான வீரர்கள், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அறையில் இருந்த டேபிள், புத்தகங்கள், முக்கிய கோப்புகள், மாணவர்களின் ரெக்கார்டு நோட்டுகள் சாம்பலானது.

மின் கசிவு காரணமா, மர்ம நபர்களால் இந்த சம்பவம் நடந்ததா? என தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருவதாக தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், பாகாயம் போலீசாரும் விசாரிக்கின்றனர்.