அடித்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக் கப்படும் வாலிபரின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
அரக்கோணம் அடுத்த செய்யூர் பஞ்.க்கு உட்பட்ட அவினாசி கண்டிகை வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது இளைய மகன் அருண் (32). திருமணம் ஆகாதவர். இவர் கடந்த 22ம் தேதி அதே பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். பின்னர் பச்சையம்மன் கோயில் அருகில் அருண் இறந்து கிடந்தார். ஓவர் குடியால் அருண் இறந்திருக்கலாம் என நினைத்து அவரது பெற்றோர் போலீசில் புகார் ஏதும் தெரிவிக்காமல் அருணின் உடலை அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக ஊரில் பரவலாக பேசப்பட்டது. மேலும் வாலிபர் ஒருவர் அருணை கொலை செய்துவிட்டதாக சொன்ன ஆடியோவும் வைரல் ஆனது. இதனால் அரக்கோணம் டவுன் போலீசில் நேற்று முன்தினம் அவரது தந்தை கோவிந்தராஜ் தன்னுடைய மகனை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர், இந்நிலையில் தாசில்தார் பழனிராஜன், டிஎஸ்பி புகழேந்திகணேஷ், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன், விஏஓ லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட அருணின் உடல் நேற்று மாலை 3.40 மணிக்கு தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அருணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.