குறள் : 531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
மு.வ உரை :
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
கலைஞர் உரை :
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
சாலமன் பாப்பையா உரை :
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
Kural 531
Irandha Vekuliyin Theedhe Sirandha
Uvakai Makizhchchiyir Sorvu
Explanation :
More evil than excessive anger is forgetfulness which springs from the intoxication of great joy.
இன்றைய பஞ்சாங்கம்
06-10-2021, புரட்டாசி 20, புதன்கிழமை, அமாவாசை திதி மாலை 04.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அஸ்தம் நட்சத்திரம் இரவு 11.19 வரை பின்பு சித்திரை. மரணயோகம் இரவு 11.19 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. மஹாளய அமாவாசை. முன்னோர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 06.10.2021
மேஷம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
கடகம்
இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற யோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். எதிலும் நிதானம் தேவை.
கன்னி
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சினை தீரும்.
கும்பம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
மீனம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,