குறள் : 532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
மு.வ உரை :
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.
கலைஞர் உரை :
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.
சாலமன் பாப்பையா உரை :
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.
Kural 532
Pochchaappuk Kollum Pukazhai Arivinai
Nichcha Nirappuk Kon Raangu
Explanation :
Forgetfulness will destroy fame even as constant poverty destroys knowledge.
இன்றைய பஞ்சாங்கம்
07-10-2021, புரட்டாசி 21, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 01.47 வரை பின்பு வளர்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் இரவு 09.13 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் இரவு 09.13 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சந்திர தரிசனம். நவராத்திரி ஆரம்பம்.
இராகு காலம் -
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 07.10.2021
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும்.
ரிஷபம்
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.
மிதுனம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு
இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
மகரம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.
கும்பம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 10.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.
மீனம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு காலை 10.17 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை கையாளும் போது நிதானமாக இருப்பது உத்தமம்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,