குறள் : 550

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

மு.வ உரை :

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

கலைஞர் உரை :

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை :

கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

Kural 550

Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh
Kalaikat Tadhanotu Ner

Explanation :

For a king to punish criminals with death is like pulling up the weeds in the green corn.




இன்றைய பஞ்சாங்கம்

25-10-2021, ஐப்பசி 08, திங்கட்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பஞ்சமி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.10 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. 


இன்றைய ராசிப்பலன் - 25.10.2021

மேஷம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிட்டும். 

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கன்னி

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. மதியத்திற்கு பிறகு மனஅமைதி ஏற்படும். பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.36 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

தனுசு

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் வருமானம் பெருகும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,