குறள் : 551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.

மு.வ உரை :

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

கலைஞர் உரை :

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

சாலமன் பாப்பையா உரை :
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

Kural 551

Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu
Allavai Seydhozhukum Vendhu

Explanation :

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

இன்றைய பஞ்சாங்கம்

26-10-2021, ஐப்பசி 09, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 08.24 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. நாள் முழுவதும் திருவாதிரை நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் 

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 26.10.2021

மேஷம்

இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்

இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபமுயற்சிகளை தள்ளி வைக்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

தனுசு

இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருள் சேரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

கும்பம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,